gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

சிக்கலில் தெளிவு! தீர்க்கமான கவனம் ஒன்றில்!

மான் ஒன்று பிரசவ வலியில் இருந்தது. மழை மேகங்கள் திரண்டு இருக்க அருகில் இருந்த மரத்தனடியை நாடியது. துரதிஷ்டமாக அதன் வலப்புறம் வேடன் ஒருவன் அம்பை தன்மீது எய்ய முயற்சிப்பதும் இடப்பக்கம் புலி ஒன்று பசியுடன் தன்னை நோக்கி வருவதையும் கண்டு பதற்றமடைந்தது. வேடன் அல்லது புலிக்கு எப்படியும் பலியாகி விடுவோம். அதற்குள் தன் கருக்குழந்தையை இந்த உலகத்திற்கு தந்துவிட வேண்டும் என்று நினைத்து இறையிடம் வேண்டியது. எதிர்பாரவண்ணம் கண்ணை பறிக்கும் மின்னல் தோன்ற அதில் கண் கூசியதால் வேடன் மானை நோக்கி விட்ட அம்பு குறிதவறி எதிரில் வந்த புலியின்மீது பாய இரு துன்பத்திலிருந்தும் ஒரே சமயத்தில் தப்பி பிழைத்த மான் தன் குட்டியை ஈன்றது. கடவுளுக்கு நன்றி என நினைத்தது.

வாழ்க்கையில் பயணிக்கையில் வரும் துயரங்களுக்கிடையில் எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் கவனத்தைச் செலுத்தி மற்றதை நடப்பது இறைவன் செயல் என விட்டு விடுங்கள். நன்மையாகவே உங்கள் கர்ம விணைக்கேற்ப நடக்கும்.

திங்கட்கிழமை, 13 June 2016 20:29

பிடித்தது யார்!

பிடித்தது யார்!

நண்பர்கள் இருவர் ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது வெள்ளத்தில் ஓர் கம்பளி மூட்டை மிதந்து செல்வது கண்டனர். ஒருவன் ஆசையினால் அதை பிடித்து தனதாக்கிக் கொள்ள நினைத்து ஆற்றில் குதித்தான். நீச்சல் தெரிந்தவன் ஆனதால் அருகே சென்று கம்பளி மூட்டைப் பற்றினான். அப்போது அக்கம்பளி மூட்டை அவனை பற்றி இழுக்க ஆரம்பித்தது. போராடிக் கொண்டிருந்த அவனைப் பார்த்து கரையில் இருந்த நண்பன் கம்பளி மூட்டை போனால் போகிறது அதை விட்டு விட்டு நீ கரையேறு என்றான்.
அப்போது கம்பளிமூட்டையை பற்ற நினைத்தவன் சொன்னான் இது கம்பளி மூட்டையல்ல. கரடி. நான் விட்டாலும் அது என்னை விடுவதாக இல்லை எனக் கூக்குரலிட அவனை கரடியிடமிருந்து மீட்கச் சென்றான் நண்பன்.
இப்படித்தான் ஆத்மாக்கள் பொருள்களின்மீது ஆசை வைத்து அவற்றைப் பற்றிப் பிடிக்க முயன்று அதன்பிடியில் சிக்கித் திண்டாடுகின்றார்கள். அப்போது அவர்கள் . ஆசையை துறக்க நினைத்தாலும் அவர்களால் அது முடிவதில்லை. ஆசையின் பிடியில் அவர்கள் கட்டுண்டு விடுகின்றனர். ஆசையும் பாசமும் அவர்களை துறப்பதாக இல்லை. புரிந்து கொள் மனமே!

திங்கட்கிழமை, 06 June 2016 16:29

தெளிவான முடிவு இறுதியில்!

தெளிவான முடிவு இறுதியில்!

ஒரு வியாபாரி அவன் செய்த நெய் வியாபாரத்தில் கலப்படம் செய்தான் எனக் குற்றம் சாட்டப்பட்டு நீதிபதியின்முன் நிறுத்தப்பட்டான். நீதிபதி நன்கு விசாரனைசெய்து அவன் குற்றவாளி என தீர்ப்பளித்தார். அதற்கு தண்டனையாக அவன் வியாபாரம் செய்த நெய் நீதிபதியின்முன் கொண்டுவரப்பட்டு அன்று உணவிற்குப் பதில் அதையே சாப்பிடவேண்டும் அல்லது 25 கசையடிகள் பெற்றிடவேண்டும் அல்லது 100 தங்க நாணயங்கள் அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றார்.
தங்க நாணயங்கள் 100 இழக்க சம்மதமில்லாததால் நெய்யை உண்ணத் தொடங்க கலப்பட நெய்யாதலால் நாற்றம் குடலைப் பிடுங்க சிறிதளவு நெய்க்குமேல் அவனால் சாப்பிட முடியவில்லை. குமட்டிக்கொண்டு வாந்தி வரும் நிலை ஏற்படவே கசை அடிகளை பெற்றுக்கொள்ள முடிவு செய்தான். ஆனால் கசை அடைகளை ஒன்று இரண்டிற்குமேல் அவனால் தாங்கமுடியவில்லை. இறுதியில் 100 தங்க நாணயங்களை தண்டணையாகக் கட்டிவிட்டு மன்னிப்புகேட்டு வீட்டிற்கு வந்தான்.
முதலிலேயே நாணயங்களை கட்டி யிருந்தால் கசை அடிகளும், நெய்யை கஷ்டப்பட்டு சாப்பிட்ட அனுபவமும் நேர்ந்திருக்காது. அதைவிட கலப்படம் செய்யாமல் நேர்மையுடன் வியாபாரம் செய்திருந்தால் இந்த நிலையே ஏற்பட்டிருக்காது.
இதைப் போன்றே துன்பங்கள் வந்தவுடனதங்கள் செய்த தவறுகளையும், இறையையும் நினைப்பதில்லை. மேலும் மேலும் தாங்க முடியா இன்னல்களுக்கு ஆளான நிலையிலேயே வேறு வழியின்றி இறைவனே கதி என்று ‘இறைவனைச் சரணடைகின்றனர்

திங்கட்கிழமை, 06 June 2016 16:25

தானம்- புகழ் பெற்றது!

தானம்- புகழ் பெற்றது!

தானம் கொடு என ஒருவன் கேட்கிறான், கொடுக்காதே என ஒருவன் ஆலோசனை சொல்கின்றான். கொடுத்தால் உயிர் போகலாம். புகழ் கிடைக்கும். கொடுக்காவிட்டால் உயிர் போகாமல் இருக்கும். இகழ்வு ஏற்படலாம். இகழ்வானது துன்பத்தைத் தரும் வல்லமை கொண்டது. தங்களுடைய இலக்குகளிருந்து விலகாதவன், இறப்பை வெல்வது இயலாத காரியம் என்பதால், தன்னுடைய அந்த இறப்பு மற்ற உயிர்களுக்கு நன்மை பயக்குமெனில் தன் உன்னத சிந்தனையிலிருந்து மாறமாட்டான்.
இந்திரன் யாசிக்க, உடல் தோல் உரிந்து வேதனைப் பட்டாலும், அதனால் உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை என கர்ணன் தன் உயிர்காக்கும் கவசகுண்டலங்களை தானம் செய்தான்.
புறாவின் உயிரைக்காக்க தன் தொடையிலிருந்து மாமிசத்தை அறிந்து கொடுத்தான் சிபி மன்னன்.
பாம்பினத்திற்காக தன் உயிரைக் கொடுக்க சித்தமான ஜீமுதவானனின் தியாகம் போற்றப்பட்டு கருடனால் திரும்ப உயிர் கிடைத்தது.
தேவர்குலம் காக்க யாசித்த இந்திரனுக்கு தன் முதுகெழும்பை தானமாக கொடுத்து உயிர் நீத்த ததீசி முனிவரின் தியாகம், தோல் கொடுத்த -கர்ணன், மாமிசம்- கொடுத்த சிபி, உயிர் கொடுத்த -ஜீமுதவானன் ஆகியவர்கள் திரும்பப் பெற்றவைகளைவிட மேலானதாக போற்றப்படுகின்றது தியாகம்.
எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை(கயாசூரன்) தீண்டியவர்கள் சொர்க்கம் செல்ல வரம் பெற்றதால் யமலோகம் காலியானதால் யமனின் வேண்டுகோளின்படி திருமால் உலக நன்மை கருதி உன் உடல் யாகத்திற்கு வேண்டும் எனக் கேட்டதும் உடன் தர ஒப்புக்கொண்டான் கயாசூரன். மேலும் யாகத்தின் போது அவன் உடல் அசையாமலிருக்க பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்களால் ஏதும் செய்யமுடியாமல் போகவே திருமால் கதை கொண்டு அந்த இதயத்தை தாக்கி அடக்க தன்னிடம் சொல்லியிருந்தால் தானே உலக நன்மைக்காக நடக்கும் இந்த யாகத்திற்காக அடங்கியிருப்பேனே என்றான். அவனது இந்த தியாகம் இன்றளவும் நினைக்கப்பட்டு அவன் உடல் கிடந்த இடத்தில் முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்ய அருள் பாலித்தார் பெருமாள்.
தானம் ஒரு ஆத்மாவிற்கு புண்ணியம் சேர்த்து மேன்மையடையச் செய்யும் சக்தி கொண்டது.

திங்கட்கிழமை, 06 June 2016 16:21

நிராகரிப்பின் கொடுமை!

நிராகரிப்பின் கொடுமை!


போர் முனையிலிருந்து திரும்பிய மகனிடமிருந்து பல நாட்களுக்குப்பின் போன் வர ஆவலுடன் பேச ஆரம்பித்தனர் பெற்றோர்கள். அவன் குரலைக் கேட்டதும் நெகிழ்ந்து போயினர். அவன் சொன்னான், ‘அம்மா நான் சீக்கிரம் வீடு திரும்பி விடுவேன். என் நண்பன் ஒருவன் போர் முனையில் கை கால்களை இழந்துவிட்டான். அவனுக்கு நம்மைத் தவிர யாருமில்லை. எனவே அவனை நம்முடன் வைத்துக்கொள்ள நான் அவனை கூட்டிவரட்டுமா என ஆலோசித்தான்.
அப்பா சொன்னார், கேட்க மிகவும் கஷ்டமாக இருந்தாலும் அவனை எப்படி நம்முடன் வைத்துக் கொள்வது. உனக்கு திருமண ஏற்பாடுகள் செய்யவேண்டும். எனவே அவன் வாழ்வதற்கு ஓர் நல்ல இடமாகப் பார்த்துக் கொடுத்து விடலாம் என்றார். அவனை நம்முடன் வைத்துக் கொண்டால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்றான் மகன். தந்தை கோபமுற்றார். அவனுக்கு உதவி செய்வதாக நினைத்து நம்மையெல்லாம் தியாகம் செய்யச் சொல்கின்றாயா! அவனது வாழ்க்கையை அவனே பார்த்துக் கொள்வான். நீ அவனை விட்டு விட்டு உடனே வா என்றார்.
உடன் தொலை தொடர்பை துண்டித்தவன் பிறகு பேசவேயில்லை. சிறிது நாட்கள் கழித்து அந்நகர் காவல் அதிகாரியிடமிருந்து ஒரு தகவல் வந்தது. உங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டான் என்று கேள்விப்பட்ட பெற்றோர் மிகவும் பதைபதைத்து மகனிருக்கும் ஊருக்கு விரைந்தனர். நேரில் சென்று பார்த்தபோது அவர்கள் மிகவும் அதிர்ச்சியாயினர். அவர்களது மகனுக்கு ஒரு காலும் கையுமில்லை. போரில் நண்பன் இழந்ததாக கூறியது தன்னைத்தான் எனப்புரிந்து கொண்டனர். ஊனமுற்றவரை தன் பெற்றோரே ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் மனமுறிவு ஏற்பட்டு விட்டது. நிராகரித்தல் எவ்வளவு கொடுமையானதாக மாறியது! என்பதை உணர்ந்து நீங்கள் அவ்வாறு நிராகரிப்பு செய்யாதீர்கள்.

சனிக்கிழமை, 21 November 2015 06:42

முன்னேறு! கழுதையின் ஞானம்!

முன்னேறு! கழுதையின் ஞானம்!

வயதான கழுதை தவறுதலாக கிணற்றில் விழுந்து விட்டது. வெளியேவர முயற்சித்து முடியவில்லை. பயத்தால் அரண்ட கழுதை கத்தியது. கழுதையின் குரலைக் கேட்ட விவசாயி அங்குவந்து பார்த்து நிலைமைதனைப் புரிந்துகொண்டான். வயதான கழுதை இனி தனக்கு உபயோகப்படாது. கிணறும் நீரின்றி பாழ். கிணற்றை மூடி விட எண்ணம் கொண்டிருந்தவன் ஆட்களை வரவழைத்து செயல் படத்துவங்கினான். சிறிது நேரத்தில் நடப்பதை புரிந்து கொண்டது கழுதை. தன்னை மண்ணில் மூடி அப்படியே கிணற்றில் புதைக்கப்போவதை உணர்ந்தது.
மண்ணை வாரிப்போட கத்திக் கொண்டிருந்த கழுதை தன் சப்தத்தை நிறுத்திவிட இறந்துவிட்டதா என சந்தேகத்தில் கிணற்றின் உள்ளே எட்டிப் பார்த்தவர்களுக்கு ஆச்சரியம். உள்ளே தள்ளிய மண் தன் மேல் விழுந்ததும் உடலை சிலிர்த்து அம்மண்ணைக் கீழே தள்ளி விட்டு அதன் மேல் நின்று கொண்டிருந்தது கழுதை. இப்படியே தன் மேல் விழும் மண்ணை தள்ளிவிட்டு அதன்மேல் ஏறித் தொடர்ந்து செயல்பட்டு கிணறு நிரம்பியதும் மேலேறி வந்தது.
ஆத்மாக்களே உங்களை நோக்கி எரியப்படும் குப்பை கூளங்களை, கற்களை ஒதுக்கிவிட்டு அடியெடுத்து மேலே செல்லப் பழகுங்கள். அவமானப்படுத்தும் நிகழ்வுகளையும் சொற்களையும் ஊக்கப்படுத்துபவைகளாகக் கொள்ளுங்கள். முதுகின் மேலுள்ள சுமையை இறக்கிவைது அதை நீங்கள் ஏறி நிற்கும் மேடையாக மாற வாய்ப்புகளை உருவாக்கு. புரிந்து கொள் மனமே!

வெள்ளிக்கிழமை, 13 November 2015 14:33

நினைவுகளை பகிர்தல் ஆனந்தம்!

நினைவுகளை பகிர்தல் ஆனந்தம்!

மோசமான நிலையில் இருக்கும் இரு நோயாளிகள் அந்த மருத்துவமணையில் அனுமதிக்கப்பெற்றிருந்தனர். ஒருவருக்கு ஜன்னல் ஓரம் படுக்கை. மற்றவருக்கு அவர் அருகில். இருவருக்கும் இடையில் ஓர் திரை. ஜன்னல் ஓரம் இருக்கும் நோயாளியை தினமும் மாலை வேலையில் சாய்ந்திருக்க அனுமதித்திருந்தனர். மற்றவரால் அசையக்கூட முடியாத நிலை. இரு நோயாளிகளும் ஒருவருக்கொருவர் பேசி பழக ஆரம்பித்தனர். தங்களின் வாழ்க்கையில் பார்த்த கேட்ட சந்தித்த நிகழ்வுகளை இருவரும் பரிமாறிக் கொள்வர். மாலை வேளையில் ஜன்னலருகே இருந்தவர் தான் பார்ப்பது எல்லாம் பற்றி மிகத் தெளிவாக கூறுவார். அதை அப்படியே தாம் பார்ப்பதாக பக்கத்து படுக்கைகாரர் உணர்வார்.
பக்கத்து படுக்கைகாரர் தினமும் மாலைப் பொழுது எப்போது வரும் தன் பக்கத்து படுக்கை நண்பர் வெளி உலகில் நடப்பதை பார்த்துச் சொல்ல அதைக் கேட்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். ஜன்னலுக்கு வெளியில் எவ்வளவு பரந்த உலகம், அதில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் ஆனந்தத்தை அவருக்குத் தருவதாகவும் அமைந்தது. இயற்கையின் விநோதங்களை நண்பரின் வாயிலாக கேட்டு செவி இன்பம் அடைந்தார். மனதிற்கு இதமும் ஆறுதலும் கிடைத்தது.
ஒருநாள் காலை செவிலியர் வந்து பார்த்தபோது உறக்கத்திலேயே ஜன்னல் அருகில் இருந்தவர் அமைதியாக இறந்துவிட்டது தெரிந்தது. அந்த ஜன்னல் நண்பரின் இழப்பை பக்கத்து படுக்கையில் இருப்பவரால் அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில நாட்களில் அவரின் படுக்கை ஜன்னல் ஓரத்திற்கு மாற்றப்பட்டது. மிகவும் சிரமப்பட்டு கைகளை ஊன்றி தலையைத் தூக்கி ஜன்னல் வெளியே பார்க்க முறபட்டார். நண்பர் சொல்லித் தான் மகிழ்ந்த அந்த வெளி உலகக் காட்சிகளை நீண்ட நாட்களுக்குப்பின் தன் கண்ணால் கண்டு அனுபவிக்கப் போவதை நினைத்து அவருக்குள் அளவிடமுடியாத ஆனந்தம் ஏற்பட்டது. கடும் முயற்சிக்குப்பின் வெளியே பார்த்த அவருக்கு பெரிய அதிர்ச்சியாயிருந்தது. அங்கே ஒர் பாழடைந்த வீடுதான் இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் ஒன்றும் இல்லை வறண்ட நிலங்களாகத் தெரிந்தது.
அப்படியானால் தன் நண்பர் தினமும் பார்த்து பார்த்து சொல்லியது எல்லாம் அவரது கற்பனையான இயற்கையா! இல்லாதன பற்றி தத்ரூபமாக விளக்கி கூறினாரே! அதன் அவசியம் என்ன! குழம்பினார் நண்பர். செவிலியரைக் கூப்பிட்டு நண்பர் தான் கேட்டு ரசித்தவையெல்லாம் சொன்னார். அப்போது அந்தச் செவிலியர் அந்த நோயாளிக்கு கணபார்வையில்லை. போரில் அவரது கண் பறிபோயிற்று. எதையும் அவரால் பார்க்க முடியாது. கண் பார்வை இருந்தபோது தான் பார்த்த சந்தோஷம் தரக்கூடிய நிகழ்வுகளை இயற்கையின் அழகை யெல்லாம் உங்களுடன் பகிர்ந்து உங்களை ஆனந்தத்தில் மூழ்கடித்திருக்கின்றார். சந்தோஷத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து அளிக்கும்போது தமக்கு ஏற்படும் இன்பம் பெரிது. பல்வேறு காரணங்களால் அதை இழந்தவர்களுக்கு அளிப்பது மேலும் சிறப்பு.

வியாழக்கிழமை, 12 November 2015 03:27

இடைப்பட்ட ஞானம்- பயம்!

இடைப்பட்ட ஞானம்- பயம்!
சித்தர் ஒருவர் பாம்பு வளர்த்தார். எங்கு போனாலும் தன் வளர்ப்புப் பாம்போடுதான் வெளியே போவார். ஒரு நாள் வெளியூருக்குப் போய்க் கொண்டிருந்த சித்தர் நல்ல வெயில் நேரத்தில் ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கினார். அருகே அவரது பாம்புக்கூடை. பாம்பு அன்று அந்தக் கூடையிலிருந்து தப்பிவிட்டது. பக்கத்திலிருக்கும் ஒரு வீட்டை நோக்கி ஊர்ந்து சென்றது. அங்கே ஒரு இரண்டு வயதுக் குழந்தை. தத்தக்கா புத்தக்கா என்று நடந்துவந்தது. இந்தப் பாம்பைப் பார்த்ததும், 'ஐ பொம்மை!' என்று பாய்ந்து பிடித்துவிட்டது.
அந்த நேரம் பார்த்து அந்தக் குழந்தையின் அம்மா வீட்டிலிருந்து வெளியே வந்தார். குழந்தை கையில் பாம்பைப் பார்த்துவிட்டு அலறினார். அதைக் கேட்டு எல்லோரும் ஓடி வந்தார்கள். ஆனால் அவர்களில் யாருக்கும் பாம்பை நெருங்கத் தைரியம் இல்லை. பாதுகாப்பான தூரத்தில் நின்றபடி 'கண்ணு, அந்தப் பாம்பைக் கீழே போடு' என்று அலறினார்கள். 'கடவுளே, எங்க குழந்தையைக் காப்பாத்து' என்று பிரார்த்தனை செய்தார்கள்.
இந்தச் சத்தம் கேட்டு சித்தர் எழுந்து கொண்டார். பரபரப்பாக குழந்தை கையில் பாம்பைப் பார்த்ததும், பதறாமல் அருகே சென்று அதைப் பிடித்துக் கூடையில் போட்டார். 'ஐயா, உங்களுக்கு பயமே இல்லையா?' என்று கூட்டத்தில் ஒருவர் கேட்டார். 'எதுக்கு பயம்? அந்தப் பாம்புக்குதான் ஏற்கெனவே பல் பிடுங்கியாச்சே!'.

வியாழக்கிழமை, 12 November 2015 03:21

காரடையான் நோன்பு!

காரடையான் நோன்பு!
துயிமதிதேசன் மகன் சத்யவான் அற்ப ஆயுள் உள்ளவன் என்று தெரிந்தும் அவனின் குணவிசேசங்களைப்பற்றிக் கேள்விப்பட்டு சாவித்திரி அவனை மணந்தாள். சத்தியவான் பெற்றோர்கள் பார்வையிழ்ந்தவர்கள். நாட்டையிழ்ந்து சத்தியவானுடன் காட்டில் வாழ்ந்து வந்தனர். ஒருவருட காலம் கழிந்தது. விறகு வெட்டவும் பழங்கள் பறிக்கவும் சத்தியவானும் சாவித்திரியும் சென்றனர். ஒரு மரத்தின்மீது ஏறி கனிகள் பறிக்கும்போது சத்தியவான் கீழே விழுந்து இறந்தான். சாவித்திரி சாவித்திரிதேவியின் பக்தை. அவள் கண்களுக்கு சத்தியவானின் உயிரை யமன் எடுத்துச் செல்வது புலப்பட்டது.
மாசியும் பங்குனியும் கூடும் நேரம் அது. காட்டில் கிடைத்த நெல் மணிகளை சேகரித்து உமி நீக்கி காய்ந்த காராமணிகளை அரிசியுடன் சேர்த்து பொடி செய்து வெல்லத் துகள்களைச் சேர்த்துப் பிசைந்து வைக்கோலின்மேல் வைத்து அடையாகச் சுட்டு, இடைச் சிறுவர்களிடமிருந்து பெற்ற வெண்ணெய்யையும் வெல்லக் காரடையையும் படைத்துவிட்டு (காரடையான் நோன்பு) சாவித்திரி அன்னையின் அருளால் அவளும் யமனைப் பின் தொடர்ந்தாள்.

வியாழக்கிழமை, 12 November 2015 03:19

பயம் விலக்கி பக்தி- நம்பிக்கை!

பயம் விலக்கி பக்தி- நம்பிக்கை!
வாழ்க்கைக் கடலில் நீந்த முடியவில்லை. கடலும் தூரத்தில் இருக்கின்றது. எனக் குளத்தில் விழுந்து உயிரைப் போக்க நினைத்தவன் வழியில் ஒரு சாதுவைக் கண்டான். விபரம் அறிந்த அவர் அவன் செயலைத் தடுத்தார். அவன் ஒரு கல்லை குளத்தில் எறிந்துவிட்டு அதுகூட சுலபமாக மூழ்கி விட்டது. என்னால் முடியவில்லையே எனவேதனைப் பட்டான். அந்த ஞானி அவனிடம் ஒரு பலகையை எடுத்துப் போடச் சொன்னார். அது அக்குளத்தில் மிதந்தது. அப்போது நீ முதலில் போட்ட கல்லை அப்பலகையின்மேல் வை என்றார். ஆச்சர்யம். பலகை, கல் இரண்டும் மிதந்தது. ஞானி சொன்னார். இந்த சூட்சமத்தை புரிந்து கொண்டால் நீ உன் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவாய். மனத்தை துன்பக் குளத்தில் மூழ்க விடாமல் நம்பிக்கைப் பலகையை அதன் கீழ் வை. துயரத்தைக் கண்டு சேர்ந்து போகாதே. நம்மைக் காப்பாற்ற ஓர் சக்தி இருக்கின்றது என நம்பு. பயம் விலக்கி பக்தி கொள் என்றார்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27098467
All
27098467
Your IP: 3.22.248.208
2024-04-27 20:47

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg